குடி செயல் வகை 1021-1030 | Thirukkural, திருக்குறள் 1021-1030 |
Thirukkural, திருக்குறள் 1021-1030 :-
குடி செயல் வகை |
|
1021 |
'கருமம் செய'-ஒருவன்-’கைதூவேன்’ என்னும் |
|
பெருமையின், பீடு உடையது இல். |
|
|
1022 |
ஆள்வினையும், ஆன்ற அறிவும், என இரண்டின் |
|
நீள் வினையான், நீளும் குடி. |
|
|
1023 |
'குடி செய்வல்' என்னும் ஒருவற்கு, தெய்வம் |
|
மடி தற்று, தான் முந்துறும். |
|
|
1024 |
சூழாமல் தானே முடிவு எய்தும்-தம் குடியைத் |
|
தாழாது உஞற்றுபவர்க்கு. |
|
|
1025 |
குற்றம் இலனாய், குடி செய்து வாழ்வானைச் |
|
சுற்றமாச் சுற்றும், உலகு. |
|
|
1026 |
நல் ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த |
|
இல் ஆண்மை ஆக்கிக்கொளல். |
|
|
1027 |
அமரகத்து வன்கண்ணர் போல, தமரகத்தும் |
|
ஆற்றுவார் மேற்றே, பொறை. |
|
|
1028 |
குடி செய்வார்க்கு இல்லை, பருவம்; மடி செய்து, |
|
மானம் கருத, கெடும். |
|
|
1029 |
இடும்பைக்கே கொள்கலம்கொல்லோ-குடும்பத்தைக் |
|
குற்றம் மறைப்பான் உடம்பு!. |
|
|
1030 |
இடுக்கண் கால் கொன்றிட, வீழும்-அடுத்து ஊன்றும் |
|
நல் ஆள் இலாத குடி. |