குறிப்பு அறிதல் 701-710 | Thirukkural, திருக்குறள் 701 - 710 |
Thirukkural, திருக்குறள் 701 - 710 :-
குறிப்பு அறிதல் |
|
701 |
கூறாமை நோக்கி, குறிப்பு அறிவான், எஞ்ஞான்றும் |
|
மாறா நீர் வையக்கு அணி. |
|
|
702 |
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத் |
|
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்!. |
|
|
703 |
குறிப்பின் குறிப்பு உணர்வாரை, உறுப்பினுள் |
|
யாது கொடுத்தும், கொளல்!. |
|
|
704 |
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு, ஏனை |
|
உறுப்பு ஓரனையரால், வேறு. |
|
|
705 |
குறிப்பின் குறிப்பு உணராஆயின், உறுப்பினுள் |
|
என்ன பயத்தவோ, கண்?. |
|
|
706 |
அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம் |
|
கடுத்தது காட்டும், முகம். |
|
|
707 |
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-உவப்பினும் |
|
காயினும், தான் முந்துறும்? |
|
|
708 |
முகம் நோக்கி நிற்க அமையும்-அகம் நோக்கி, |
|
உற்றது உணர்வார்ப் பெறின். |
|
|
709 |
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-கண்ணின் |
|
வகைமை உணர்வார்ப் பெறின். |
|
|
710 |
'நுண்ணியம்' என்பார் அளக்கும் கோல், காணுங்கால், |
|
கண் அல்லது, இல்லை பிற. |