பண்பு உடைமை 991-1000 | Thirukkural, திருக்குறள் 991-1000 |
Thirukkural, திருக்குறள் 991-1000 :-
பண்பு உடைமை |
|
991 |
எண் பதத்தால், எய்தல் எளிது என்ப, யார்மாட்டும், |
|
பண்பு உடைமை என்னும் வழக்கு. |
|
|
992 |
அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ் இரண்டும் |
|
பண்பு உடைமை என்னும் வழக்கு. |
|
|
993 |
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்; வெறுத்தக்க |
|
பண்பு ஒத்தல், ஒப்பது ஆம் ஒப்பு. |
|
|
994 |
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் |
|
பண்பு பாராட்டும், உலகு. |
|
|
995 |
நகையுள்ளும் இன்னாது, இகழ்ச்சி; பகையுள்ளும் |
|
பண்பு உள, பாடு அறிவார் மாட்டு. |
|
|
996 |
பண்பு உடையார்ப் பட்டு, உண்டு உலகம்; அது இன்றேல், |
|
மண் புக்கு மாய்வதுமன். |
|
|
997 |
அரம் போலும் கூர்மையரேனும், மரம் போல்வர், |
|
மக்கள் பண்பு இல்லாதவர். |
|
|
998 |
நண்பு ஆற்றார் ஆகி, நயம் இல செய்வார்க்கும், |
|
பண்பு ஆற்றாராதல் கடை. |
|
|
999 |
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம், |
|
பகலும், பாற் பட்டன்று, இருள். |
|
|
1000 |
பண்பு இலான் பெற்ற பெருஞ் செல்வம்-நன் பால் |
|
கலம் தீமையால் திரிந்தற்று. |