🏠

    தகை அணங்கு உறுத்தல் 1081-1090 | Thirukkural, திருக்குறள் 1081-1090

     Thirukkural, திருக்குறள் 1081-1090 :-

    தகை அணங்கு உறுத்தல்

     

        1081

    அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை-

     

    மாதர்கொல்! மாலும், என் நெஞ்சு.

     

     

        1082

    நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்-தாக்கு அணங்கு

     

    தானைக் கொண்டன்னது உடைத்து.

     

     

        1083

    பண்டு அறியேன், ‘கூற்று’ என்பதனை; இனி அறிந்தேன்;

     

    பெண்தகையான் பேர் அமர்க் கட்டு.

     

     

        1084

    கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப்

     

    பேதைக்கு, அமர்த்தன கண்.

     

     

        1085

    கூற்றமோ! கண்ணோ! பிணையோ!- மடவரல்

     

    நோக்கம் இம் மூன்றும் உடைத்து.

     

     

        1086

    கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர்

     

    செய்யலமன், இவள் கண்.

     

     

        1087

    கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்

     

    படாஅ முலைமேல் துகில்!.

     

     

        1088

    ஒள் நுதற்கு, ஓஒ! உடைந்ததே-ஞாட்பினுள்

     

    நண்ணாரும் உட்கும் என் பீடு!.

     

     

        1089

    பிணை ஏர் மட நோக்கும், நாணும் உடையாட்கு

     

    அணி எவனோ, ஏதில தந்து?.

     

     

        1090

    உண்டார்கண் அல்லது, அடு நறா, காமம்போல்

     

    கண்டார் மகிழ் செய்தல் இன்று.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/