🏠

    அவை அறிதல் 711-720 | Thirukkural, திருக்குறள் 711 - 720

     Thirukkural, திருக்குறள் 711 - 720 :-


    அவை அறிதல்

     

           711

    அவை அறிந்து, ஆராய்ந்து, சொல்லுக-சொல்லின்

     

    தொகை அறிந்த தூய்மையவர்!.

     

     

           712

    இடை தெரிந்து, நன்கு உணர்ந்து, சொல்லுக- சொல்லின்

     

    நடை தெரிந்த நன்மையவர்!.

     

     

           713

    அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்

     

    வகை அறியார்; வல்லதூஉம் இல்.

     

     

           714

    ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்! வெளியார்முன்

     

    வான் சுதை வண்ணம் கொளல்!.

     

     

           715

    'நன்று' என்றவற்றுள்ளும் நன்றே-முதுவருள்

     

    முந்து கிளவாச் செறிவு.

     

     

           716

    ஆற்றின் நிலைதளர்ந்தற்றே-வியன் புலம்

     

    ஏற்று, உணர்வார்முன்னர் இழுக்கு.

     

     

           717

    கற்று அறிந்தார் கல்வி விளங்கும்-கசடு அறச்

     

    சொல் தெரிதல் வல்லார் அகத்து.

     

     

           718

    உணர்வது உடையார்முன் சொல்லல்-வளர்வதன்

     

    பாத்தியுள் நீர் சொரிந்தற்று.

     

     

           719

    புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க-நல் அவையுள்

     

    நன்கு செலச் சொல்லுவார்!.

     

     

           720

    அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால்-தம் கணத்தர்

     

    அல்லார்முன் கோட்டி கொளல்!.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/