பேதைமை 831-840 | Thirukkural, திருக்குறள் 831-840 |
Thirukkural, திருக்குறள் 831-840 :-
பேதைமை |
|
831 |
பேதைமை என்பது ஒன்று; ‘யாது?’ எனின், ஏதம் கொண்டு, |
|
ஊதியம் போகவிடல். |
|
|
832 |
பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை |
|
கை அல்லதன்கண் செயல். |
|
|
833 |
நாணாமை, நாடாமை, நார் இன்மை, யாது ஒன்றும் |
|
பேணாமை,-பேதை தொழில். |
|
|
834 |
ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் அடங்காப் |
|
பேதையின் பேதையார் இல். |
|
|
835 |
ஒருமைச் செயல் ஆற்றும், பேதை-எழுமையும் |
|
தான் புக்கு அழுந்தும் அளறு!. |
|
|
836 |
பொய்படும் ஒன்றோ; புனை பூணும்;-கை அறியாப் |
|
பேதை வினை மேற்கொளின். |
|
|
837 |
ஏதிலார் ஆர, தமர் பசிப்பர்-பேதை |
|
பெருஞ் செல்வம் உற்றக்கடை. |
|
|
838 |
மையல் ஒருவன் களித்தற்றால்-பேதை தன் |
|
கை ஒன்று உடைமை பெறின். |
|
|
839 |
பெரிது இனிது, பேதையார் கேண்மை-பிரிவின்கண் |
|
பீழை தருவது ஒன்று இல்!. |
|
|
840 |
கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால்-சான்றோர் |
|
குழா அத்துப் பேதை புகல். |