மன்னரைச் சேர்ந்து ஒழுகல் 691-700 | Thirukkural, திருக்குறள் 691 - 700 |
Thirukkural, திருக்குறள் 691 - 700 :-
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் |
|
691 |
அகலாது, அணுகாது, தீக் காய்வார் போல்க- |
|
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார். |
|
|
692 |
மன்னர் விழைப விழையாமை, மன்னரான் |
|
மன்னிய ஆக்கம் தரும். |
|
|
693 |
போற்றின் அரியவை போற்றல்-கடுத்தபின், |
|
தேற்றுதல் யார்க்கும் அரிது. |
|
|
694 |
செவிச் சொல்லும், சேர்ந்த நகையும், அவித்து ஒழுகல்- |
|
ஆன்ற பெரியார் அகத்து!. |
|
|
695 |
எப் பொருளும் ஓரார், தொடரார், மற்று அப் பொருளை |
|
விட்டக்கால் கேட்க, மறை!. |
|
|
696 |
குறிப்பு அறிந்து, காலம் கருதி, வெறுப்பு இல |
|
வேண்டுப, வேட்பச் சொலல்!. |
|
|
697 |
வேட்பன சொல்லி, வினை இல எஞ்ஞான்றும் |
|
கேட்பினும், சொல்லா விடல்!. |
|
|
698 |
'இளையர், இன முறையர்' என்று இகழார், நின்ற |
|
ஒளியொடு ஒழுகப்படும். |
|
|
699 |
'கொளப்பட்டேம்' என்று எண்ணி, கொள்ளாத செய்யார்- |
|
துளக்கு அற்ற காட்சியவர். |
|
|
700 |
பழையம் எனக் கருதி, பண்பு அல்ல செய்யும் |
|
கெழுதகைமை கேடு தரும். |