🏠

    ஒற்று ஆடல் 581-590 | Thirukkural, திருக்குறள் 581 - 590

    Thirukkural, திருக்குறள் 581 - 590 :- 


    ஒற்று ஆடல்

     

        581

    ஒற்றும், உரை சான்ற நூலும், இவை இரண்டும்

     

    தெற்றென்க, மன்னவன் கண்.

     

     

        582

    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

     

    வல்லறிதல், வேந்தன் தொழில்.

     

     

        583

    ஒற்றினான் ஒற்றி, பொருள் தெரியா மன்னவன்

     

    கொற்றம் கொளக் கிடந்தது இல்.

     

     

        584

    வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார், என்று ஆங்கு

     

    அனைவரையும் ஆராய்வது-ஒற்று.

     

     

        585

    கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்

     

    உகா அமை வல்லதே-ஒற்று.

     

     

       586

    துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து, ஆராய்ந்து,

     

    என் செயினும் சோர்வு இலது-ஒற்று.

     

     

        587

    மறைந்தவை கேட்க வற்று ஆகி, அறிந்தவை

     

    ஐயப்பாடு இல்லதே-ஒற்று.

     

     

        588

    ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்

     

    ஒற்றினால் ஒற்றி, கொளல்.

     

     

        589

    ஒற்று ஒற்று உணராமை ஆள்க; உடன் மூவர்

     

    சொல் தொக்க தேறப்படும்.

     

     

       590

    சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்,

     

    புறப்படுத்தான் ஆகும், மறை.



      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/