🏠

    தூது 681-690 | Thirukkural, திருக்குறள் 681 - 690

    Thirukkural, திருக்குறள் 681 - 690 :- 


    தூது

     

        681

    அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம்

     

    பண்பு உடைமை,- தூது உரைப்பான் பண்பு.

     

     

       682

    அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை-தூது உரைப்பார்க்கு

     

    இன்றியமையாத மூன்று.

     

     

       683

    நூலாருள் நூல் வல்லன் ஆகுதல்-வேலாருள்

     

    வென்றி வினை உரைப்பான் பண்பு.

     

     

       684

    அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி, இம் மூன்றன்

     

    செறிவு உடையான் செல்க, வினைக்கு.

     

     

       685

    தொகச் சொல்லி, தூவாத நீக்கி, நகச் சொல்லி,

     

    நன்றி பயப்பது ஆம்-தூது.

     

     

       686

    கற்று, கண் அஞ்சான், செலச் சொல்லி, காலத்தால்

     

    தக்கது அறிவது ஆம்-தூது.

     

     

       687

    கடன் அறிந்து, காலம் கருதி, இடன் அறிந்து,

     

    எண்ணி, உரைப்பான் தலை.

     

     

       688

    தூய்மை, துணைமை, துணிவு உடைமை, இம் மூன்றின்

     

    வாய்மை-வழி உரைப்பான் பண்பு.

     

     

       689

    விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்-வடு மாற்றம்

     

    வாய் சோரா வன்கணவன்.

     

     

       690

    இறுதி பயப்பினும், எஞ்சாது, இறைவற்கு

     

    உறுதி பயப்பது ஆம்-தூது.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/