நெஞ்சொடு புலத்தல் 1291-1300 | Thirukkural, திருக்குறள் 1291-1300 |
Thirukkural, திருக்குறள் 1291-1300 :-
நெஞ்சொடு புலத்தல் |
|
1291 |
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், எவன்,-நெஞ்சே!- |
|
நீ எமக்கு ஆகாதது?. |
|
|
1292 |
உறாஅதவர்க் கண்ட கண்ணும், அவரைச் |
|
செறாஅர் எனச் சேறி-என் நெஞ்சு. |
|
|
1293 |
'கெட்டார்க்கு நட்டார் இல்' என்பதோ-நெஞ்சே!-நீ |
|
பெட்டாங்கு அவர்பின் செலல்?. |
|
|
1294 |
இனி, அன்ன நின்னொடு சூழ்வார் யார்-நெஞ்சே! |
|
துனி செய்து துவ்வாய்காண் மற்று?. |
|
|
1295 |
பெறாஅமை அஞ்சும்; பெறின், பிரிவு அஞ்சும்; |
|
அறாஅ இடும்பைத்து-என் நெஞ்சு. |
|
|
1296 |
தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் |
|
தினிய இருந்தது-என் நெஞ்சு. |
|
|
1297 |
நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என் |
|
மாணா மட நெஞ்சின் பட்டு. |
|
|
1298 |
'எள்ளின், இளிவாம்' என்று எண்ணி, அவர் திறம் |
|
உள்ளும்-உயிர்க் காதல் நெஞ்சு. |
|
|
1299 |
துன்பத்திற்கு யாரே துணை ஆவார்-தாம் உடைய |
|
நெஞ்சம் துணை அல்வழி?. |
|
|
1300 |
தஞ்சம், தமர் அல்லர் ஏதிலார்-தாம் உடைய |
|
நெஞ்சம் தமர் அல்வழி. |