படைச் செருக்கு 771-780 | Thirukkural, திருக்குறள் 771 - 780 |
Thirukkural, திருக்குறள் 771 - 780 :-
படைச் செருக்கு |
|
771 |
என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை |
|
முன் நின்று கல் நின்றவர். |
|
|
772 |
கான முயல் எய்த அம்பினில், யானை |
|
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. |
|
|
773 |
பேர் ஆண்மை என்ப, தறுகண்; ஒன்று உற்றக்கால், |
|
ஊராண்மை மற்று அதன் எஃகு. |
|
|
774 |
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் |
|
மெய் வேல் பறியா, நகும். |
|
|
775 |
விழித்த கண் வேல் கொண்டு எறிய, அழித்து இமைப்பின், |
|
ஓட்டு அன்றோ, வன்கணவர்க்கு?. |
|
|
776 |
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் |
|
வைக்கும், தன் நாளை எடுத்து. |
|
|
777 |
சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார் |
|
கழல் யாப்புக் காரிகை நீர்த்து. |
|
|
778 |
உறின், உயிர் அஞ்சா மறவர், இறைவன் |
|
செறினும், சீர் குன்றல் இலர். |
|
|
779 |
இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே, |
|
பிழைத்தது ஒறுக்கிற்பவர்?. |
|
|
780 |
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு |
|
இரந்து கோள்-தக்கது உடைத்து. |