புலவி நுணுக்கம் 1311-1320 | Thirukkural, திருக்குறள் 1311-1320 |
Thirukkural, திருக்குறள் 1311-1320 :-
புலவி நுணுக்கம் |
|
1311 |
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்; |
|
நண்ணேன்-பரத்த!-நின் மார்பு. |
|
|
1312 |
ஊடி இருந்தேமா, தும்மினார்-யாம் தம்மை, |
|
‘நீடு வாழ்க!’ என்பாக்கு அறிந்து. |
|
|
1313 |
கோட்டுப் பூச் சூடினும் காயும்-'ஒருத்தியைக் |
|
காட்டிய சூடினீர்!' என்று. |
|
|
1314 |
'யாரினும் காதலம்' என்றேனா, ஊடினாள்- |
|
‘யாரினும்! யாரினும்!’ என்று. |
|
|
1315 |
'இம்மைப் பிறப்பில் பிரியலம்' என்றேனா, |
|
கண் நிறை நீர் கொண்டனள். |
|
|
1316 |
'உள்ளினேன்' என்றேன்; ‘மற்று என் மறந்தீர்’ என்று என்னைப் |
|
புல்லாள், புலத்தக்கனள். |
|
|
1317 |
வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள், |
|
‘யார் உள்ளித் தும்மினீர்?’ என்று. |
|
|
1318 |
தும்முச் செறுப்ப, அழுதாள், ‘நுமர் உள்ளல் |
|
எம்மை மறைத்திரோ?’ என்று. |
|
|
1319 |
தன்னை உணர்த்தினும் காயும், ‘பிறர்க்கும் நீர் |
|
இந் நீரர் ஆகுதிர்!’ என்று. |
|
|
1320 |
நினைத்திருந்து நோக்கினும், காயும், ‘அனைத்தும் நீர் |
|
யார் உள்ளி நோக்கினீர்?’ என்று. |