🏠

    உழவு 1031-1040 | Thirukkural, திருக்குறள் 1031-1040

     Thirukkural, திருக்குறள் 1031-1040 :-

     

    உழவு

     

    1031

    சுழன்றும் ஏர்ப் பின்னது, உலகம்; அதனால்,

     

    உழந்தும் உழவே தலை.

     

     

    1032

    உழுவார் உலகத்தார்க்கு ஆணி-அஃது ஆற்றாது

     

    எழுவாரை எல்லாம் பொறுத்து.

     

     

    1033

    உழுது, உண்டு, வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்

     

    தொழுது, உண்டு, பின் செல்பவர்.

     

     

    1034

    பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர்-

     

    அலகு உடை நீழலவர்.

     

     

    1035

    இரவார்; இரப்பார்க்கு ஒன்று ஈவர்-கரவாது

     

    கை செய்து ஊண் மாலையவர்.

     

     

    1036

    உழவினார் கைம்மடங்கின், இல்லை-'விழைவதூஉம்

     

    விட்டேம்' என்பார்க்கு நிலை.

     

     

    1037

    தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும்

     

    வேண்டாது, சாலப் படும்.

     

     

    1038

    ஏரினும் நன்றால், எரு இடுதல்; கட்டபின்,

     

    நீரினும் நன்று, அதன் காப்பு.

     

     

    1039

    செல்லான் கிழவன் இருப்பின், நிலம் புலந்து

     

    இல்லாளின் ஊடிவிடும்.

     

     

    1040

    'இலம்!' என்று அசைஇ இருப்பாரைக் காணின்,

     

    நிலம் என்னும் நல்லாள் நகும்.






      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/