பொழுது கண்டு இரங்கல் 1221-1230 | Thirukkural, திருக்குறள் 1221-1230 |
Thirukkural, திருக்குறள் 1221-1230 :-
பொழுது கண்டு இரங்கல் |
|
1221 |
மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் |
|
வேலை நீ;-வாழி, பொழுது!. |
|
|
1222 |
புன்கண்ணை-வாழி, மருள் மாலை!-எம் கேள்போல் |
|
வன்கண்ணதோ, நின் துணை?. |
|
|
1223 |
பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் |
|
துன்பம் வளர, வரும். |
|
|
1224 |
காதலர் இல் வழி, மாலை, கொலைக்களத்து |
|
ஏதிலர் போல, வரும். |
|
|
1225 |
காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான் |
|
மாலைக்குச் செய்த பகை?. |
|
|
1226 |
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத |
|
காலை அறிந்ததிலேன். |
|
|
1227 |
காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, |
|
மாலை மலரும்-இந் நோய். |
|
|
1228 |
அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன் |
|
குழல்போலும் கொல்லும் படை. |
|
|
1229 |
பதி மருண்டு, பைதல் உழக்கும்-மதி மருண்டு, |
|
மாலை படர்தரும் போழ்து. |
|
|
1230 |
பொருள் மாலையாளரை உள்ளி, மருள் மாலை |
|
மாயும், என் மாயா உயிர். |