🏠

    ஆள்வினை உடைமை 611-620 | Thirukkural, திருக்குறள் 611 - 620

    Thirukkural, திருக்குறள் 611 - 620 :-

    ஆள்வினை உடைமை

     

               611

    அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்;

     

    பெருமை முயற்சி தரும்.

     

     

               612

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல்-வினைக் குறை

     

    தீர்ந்தாரின் தீர்ந்தன்று, உலகு!.

     

     

               613

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே-

     

    வேளாண்மை என்னும் செருக்கு.

     

     

               614

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடி கை

     

    வாள் ஆண்மை போல, கெடும்.

     

     

               615

    இன்பம் விழையான், வினை விழைவான் தன் கேளிர்

     

    துன்பம் துடைத்து ஊன்றும் தூண்.

     

     

               616

    முயற்சி-திருவினை ஆக்கும்; முயற்று இன்மை

     

    இன்மை புகுத்திவிடும்.

     

     

               617

    'மடி உளாள், மா முகடி' என்ப; மடி இலான்

     

    தாள் உளாள், தாமரையினாள்.

     

     

               618

    பொறி இன்மை யார்க்கும் பழி அன்று; அறிவு அறிந்து,

     

    ஆள்வினை இன்மை பழி.

     

     

               619

    தெய்வத்தான் ஆகாதுஎனினும், முயற்சி தன்

     

    மெய் வருத்தக் கூலி தரும்.

     

     

               620

    ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவு இன்றித்

     

    தாழாது உஞற்றுபவர்.






      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/