வெருவந்த செய்யாமை 561-570 | Thirukkural, திருக்குறள் 561 - 570 |
Thirukkural, திருக்குறள் 561 - 570 :-
வெருவந்த செய்யாமை |
|
561 |
தக்காங்கு நாடி, தலைச்செல்லா வண்ணத்தால் |
|
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. |
|
|
562 |
கடிது ஓச்சி, மெல்ல எறிக-நெடிது ஆக்கம் |
|
நீங்காமை வேண்டுபவர். |
|
|
563 |
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின், |
|
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். |
|
|
564 |
'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன் |
|
உறை கடுகி ஒல்லைக் கெடும். |
|
|
565 |
அருஞ் செவ்வி, இன்னா முகத்தான் பெருஞ் செல்வம் |
|
பேஎய் கண்டன்னது உடைத்து. |
|
|
566 |
கடுஞ் சொல்லன், கண் இலன் ஆயின், நெடுஞ் செல்வம் |
|
நீடு இன்றி, ஆங்கே கெடும். |
|
|
567 |
கடு மொழியும், கையிகந்த தண்டமும், வேந்தன் |
|
அடு முரண் தேய்க்கும் அரம். |
|
|
568 |
இனத்து ஆற்றி, எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச் |
|
சீறின், சிறுகும் திரு. |
|
|
569 |
செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், |
|
வெருவந்து, வெய்து கெடும். |
|
|
570 |
கல்லார்ப் பிணிக்கும், கடுங்கோல்; அது அல்லது |
|
இல்லை, நிலக்குப் பொறை. |