🏠

    வினைத் தூய்மை 651-660 | Thirukkural, திருக்குறள் 651 - 660

     Thirukkural, திருக்குறள் 651 - 660 :-

    வினைத் தூய்மை

     

            651

    துணை நலம் ஆக்கம் தரூஉம்; வினை நலம்

     

    வேண்டிய எல்லாம் தரும்.

     

     

            652

    என்றும் ஒருவுதல் வேண்டும்-புகழொடு

     

    நன்றி பயவா வினை.

     

     

            653

    ஓஒதல் வேண்டும், ஒளி மாழ்கும் செய்வினை-

     

    ‘ஆஅதும்!’ என்னுமவர்.

     

     

            654

    இடுக்கண் படினும், இளிவந்த செய்யார்-

     

    நடுக்கு அற்ற காட்சியவர்.

     

     

            655

    'எற்று!' என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,

     

    மற்று அன்ன செய்யாமை நன்று.

     

     

            656

    ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க

     

    சான்றோர் பழிக்கும் வினை.

     

     

            657

    பழி மலைந்து எய்திய ஆக்கத்தின், சான்றோர்

     

    கழி நல்குரவே தலை.

     

     

            658

    கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்

     

    முடிந்தாலும், பீழை தரும்.

     

     

            659

    அழக் கொண்ட எல்லாம் அழப் போம்; இழப்பினும்,

     

    பிற்பயக்கும், நற்பாலவை.

     

     

            660

    சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல்-பசு மண்-

     

    கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று.






      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/