தனிப் படர் மிகுதி 1191-1200 | Thirukkural, திருக்குறள் 1191-1200 |
Thirukkural, திருக்குறள் 1191-1200 :-
தனிப் படர் மிகுதி |
|
1191 |
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே, |
|
காமத்துக் காழ் இல் கனி. |
|
|
1192 |
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்-வீழ்வார்க்கு |
|
வீழ்வார் அளிக்கும் அளி. |
|
|
1193 |
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, |
|
‘வாழுநம்’ என்னும் செருக்கு. |
|
|
1194 |
வீழப்படுவார், கெழீஇயிலர், தாம் வீழ்வார் |
|
வீழப்படாஅர் எனின். |
|
|
1195 |
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ |
|
தாம் காதல் கொள்ளாக்கடை. |
|
|
1196 |
ஒருதலையான் இன்னாது, காமம்; காப் போல |
|
இருதலையானும் இனிது. |
|
|
1197 |
பருவரலும் பைதலும் காணான்கொல்-காமன் |
|
ஒருவர்கண் நின்று ஒழுகுவான்!. |
|
|
1198 |
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது, உலகத்து |
|
வாழ்வாரின் வன்கணார் இல். |
|
|
1199 |
நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு |
|
இசையும் இனிய, செவிக்கு. |
|
|
1200 |
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்-கடலைச் |
|
செறாஅஅய்!-வாழிய நெஞ்சு!. |