சுற்றம் தழால் 521-530 | Thirukkural, திருக்குறள் 521 - 530 |
Thirukkural, திருக்குறள் 521 - 530 :-
சுற்றம் தழால் |
|
521 |
பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல் |
|
சுற்றத்தார்கண்ணே உள. |
|
|
522 |
விருப்பு அறாச் சுற்றம் இயையின், அறுப்பு அறா |
|
ஆக்கம் பலவும் தரும். |
|
|
523 |
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை-குளவளாக் |
|
கோடு இன்றி நீர் நிறைந்தற்று. |
|
|
524 |
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் |
|
பெற்றத்தால் பெற்ற பயன். |
|
|
525 |
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின், அடுக்கிய |
|
சுற்றத்தால் சுற்றப்படும். |
|
|
526 |
பெருங் கொடையான், பேணான் வெகுளி, அவனின் |
|
மருங்கு உடையார் மா நிலத்து இல். |
|
|
527 |
காக்கை கரவா கரைந்து உண்ணும்; ஆக்கமும் |
|
அன்ன நீரார்க்கே உள. |
|
|
528 |
பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின், |
|
அது நோக்கி வாழ்வார் பலர். |
|
|
529 |
தமர் ஆகி, தன்-துறந்தார் சுற்றம் அமராமைக் |
|
காரணம் இன்றி வரும். |
|
|
530 |
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன் |
|
இழைத்து இருந்து, எண்ணிக் கொளல். |