🏠

    வரைவு இல் மகளிர் 911-920 | Thirukkural, திருக்குறள் 911-920

    Thirukkural, திருக்குறள் 911-920 :- 

    வரைவு இல் மகளிர்

     

    911

    அன்பின் விழையார், பொருள் விழையும் ஆய்தொடியார்

     

    இன் சொல் இழுக்குத் தரும்.

     

     

    912

    பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்

     

    நயன் தூக்கி, நள்ளா விடல்!.

     

     

    913

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்-இருட்டு அறையில்

     

    ஏதில் பிணம் தழீஇயற்று.

     

     

    914

    பொருட்பொருளார் புன் நலம் தோயார்-அருட் பொருள்

     

    ஆயும் அறிவினவர்.

     

     

    915

    பொது நலத்தார் புன் நலம் தோயார்-மதி நலத்தின்

     

    மாண்ட அறிவினவர்.

     

     

    916

    தம் நலம் பாரிப்பார் தோயார்- தகை செருக்கி,

     

    புன் நலம் பாரிப்பார் தோள்.

     

     

    917

    நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர்-பிற நெஞ்சில்

     

    பேணி, புணர்பவர் தோள்.

     

     

    918

    'ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு' என்ப-

     

    ‘மாய மகளிர் முயக்கு'.

     

     

    919

    வரைவு இலா மாண் இழையார் மென் தோள்-புரை இலாப்

     

    பூரியர்கள் ஆழும் அளறு.

     

     

    920

    இரு மனப் பெண்டிரும், கள்ளும், கவறும்.-

     

    திரு நீக்கப்பட்டார் தொடர்பு.






      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/