பிரிவு ஆற்றாமை 1151-1160 | Thirukkural, திருக்குறள் 1151-1160 |
Thirukkural, திருக்குறள் 1151-1160 :-
பிரிவு ஆற்றாமை |
|
1151 |
செல்லாமை உண்டேல், எனக்கு உரை; மற்று நின் |
|
வல்வரவு, வாழ்வார்க்கு உரை. |
|
|
1152 |
இன்கண் உடைத்து அவர் பார்வல்; பிரிவு அஞ்சும் |
|
புன்கண் உடைத்தால், புணர்வு. |
|
|
1153 |
அரிதுஅரோ, தேற்றம்-அறிவுடையார்கண்ணும் |
|
பிரிவு ஓர் இடத்து உண்மையான். |
|
|
1154 |
அளித்து, ‘அஞ்சல்!’ என்றவர் நீப்பின், தெளித்த சொல் |
|
தேறியார்க்கு உண்டோ, தவறு?. |
|
|
1155 |
ஓம்பின், அமைந்தார் பிரிவு ஓம்பல்! மற்று அவர் |
|
நீங்கின், அரிதால், புணர்வு!. |
|
|
1156 |
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிது, ‘அவர் |
|
நல்குவர்’ என்னும் நசை. |
|
|
1157 |
துறைவன் துறந்தமை தூற்றாகொல்-முன்கை |
|
இறை இறவாநின்ற வளை!. |
|
|
1158 |
இன்னாது, இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும் |
|
இன்னாது, இனியார்ப் பிரிவு. |
|
|
1159 |
தொடின் சுடின் அல்லது, காமநோய் போல, |
|
விடின் சுடல் ஆற்றுமோ, தீ?. |
|
|
1160 |
அரிது ஆற்றி, அல்லல் நோய் நீக்கி, பிரிவு ஆற்றி, |
|
பின் இருந்து, வாழ்வார் பலர். |