தெரிந்து வினையாடல் 511-520 | Thirukkural, திருக்குறள் 511 - 520 |
Thirukkural, திருக்குறள் 511 - 520 :-
தெரிந்து வினையாடல் |
|
511 |
நன்மையும் தீமையும் நாடி, நலம் புரிந்த |
|
தன்மையான் ஆளப்படும். |
|
|
512 |
வாரி பெருக்கி, வளம் படுத்து, உற்றவை |
|
ஆராய்வான் செய்க வினை!. |
|
|
513 |
அன்பு, அறிவு, தேற்றம், அவா இன்மை, இந் நான்கும் |
|
நன்கு உடையான்கட்டே தெளிவு. |
|
|
514 |
எனை வகையான் தேறியக்கண்ணும், வினை வகையான் |
|
வேறாகும் மாந்தர் பலர். |
|
|
515 |
அறிந்து, ஆற்றி, செய்கிற்பாற்கு அல்லால், வினைதான் |
|
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று. |
|
|
516 |
செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு |
|
எய்த உணர்ந்து, செயல்!. |
|
|
517 |
'இதனை, இதனால், இவன் முடிக்கும்' என்று ஆய்ந்து, |
|
அதனை அவன்கண் விடல்!. |
|
|
518 |
வினைக்கு உரிமை நாடிய பின்றை, அவனை |
|
அதற்கு உரியன் ஆகச் செயல். |
|
|
519 |
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக |
|
நினைப்பானை நீங்கும், திரு. |
|
|
520 |
நாள்தோறும் நாடுக, மன்னன்-வினைசெய்வான் |
|
கோடாமைக் கோடாது உலகு. |