🏠

    மானம் 961-970 | Thirukkural, திருக்குறள் 961-970

     Thirukkural, திருக்குறள் 961-970 :-


    மானம்

     

    961

    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்,

     

    குன்ற வருப விடல்.

     

     

    962

    சீரினும், சீர் அல்ல செய்யாரே-சீரொடு

     

    பேராண்மை வேண்டுபவர்.

     

     

    963

    பெருக்கத்து வேண்டும், பணிதல்; சிறிய

     

    சுருக்கத்து வேண்டும், உயர்வு.

     

     

    964

    தலையின் இழிந்த மயிர் அனையர்-மாந்தர்

     

    நிலையின் இழிந்தக்கடை.

     

     

    965

    குன்றின் அனையாரும் குன்றுவர்-குன்றுவ

     

    குன்றி அனைய செயின்.

     

     

    966

    புகழ் இன்றால்; புத்தேள் நாட்டு உய்யாதால்; என் மற்று,

     

    இகழ்வார்பின் சென்று நிலை?.

     

     

    967

    ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின், அந் நிலையே

     

    கெட்டான் எனப்படுதல் நன்று.

     

     

    968

    மருந்தோ, மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை-பெருந்தகைமை

     

    பீடு அழிய வந்த இடத்து?.

     

     

    969

    மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

     

    உயிர் நீப்பர், மானம் வரின்.

     

     

    970

    இளி வரின், வாழாத மானம் உடையார்

     

    ஒளி தொழுது ஏத்தும், உலகு.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/