🏠

    சான்றாண்மை 981-990 | Thirukkural, திருக்குறள் 981-990

    Thirukkural, திருக்குறள் 981-990 :- 

    சான்றாண்மை

     

             981

    கடன் என்ப, நல்லவை எல்லாம்-கடன் அறிந்து,

     

    சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு.

     

     

            982

    குண நலம், சான்றோர் நலனே; பிற நலம்

     

    எந் நலத்து உள்ளதூஉம் அன்று.

     

     

            983

    அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு

     

    ஐந்து-சால்பு ஊன்றிய தூண்.

     

     

            984

    கொல்லா நலத்தது, நோன்மை;-பிறர் தீமை

     

    சொல்லா நலத்தது, சால்பு.

     

     

            985

    ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அது சான்றோர்

     

    மாற்றாரை மாற்றும் படை.

     

     

            986

    'சால்பிற்குக் கட்டளை யாது?' எனின், தோல்வி

     

    துலை அல்லார்கண்ணும் கொளல்.

     

     

            987

    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்,

     

    என்ன பயத்ததோ, சால்பு?.

     

     

            988

    இன்மை ஒருவற்கு இளிவு அன்று-சால்பு என்னும்

     

    திண்மை உண்டாகப்பெறின்.

     

     

            989

    ஊழி பெயரினும், தாம் பெயரார்-சான்றாண்மைக்கு

     

    ஆழி எனப்படுவார்.

     

     

            990

    சான்றவர் சான்றாண்மை குன்றின், இரு நிலம்தான்

     

    தாங்காது மன்னோ, பொறை!.






      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/