🏠

    குறிப்பு அறிதல் 1091-1100 | Thirukkural, திருக்குறள் 1091-1100

     Thirukkural, திருக்குறள் 1091-1100 :-

    குறிப்பு அறிதல்

     

    1091

    இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு

     

    நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து.

     

     

    1092

    கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்

     

    செம்பாகம் அன்று; பெரிது.

     

     

    1093

    நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள்

     

    யாப்பினுள் அட்டிய நீர்.

     

     

    1094

    யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்,

     

    தான் நோக்கி, மெல்ல நகும்.

     

     

    1095

    குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண்

     

    சிறக்கணித்தாள் போல நகும்.

     

     

    1096

    உறாஅதவர்போல் சொலினும், செறாஅர் சொல்

     

    ஒல்லை உணரப்படும்.

     

     

    1097

    செறாஅச் சிறு சொல்லும், செற்றார்போல் நோக்கும்,-

     

    உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.

     

     

    1098

    அசையியற்கு உண்டு, ஆண்டு ஓர் ஏஎர்; யான் நோக்க,

     

    பசையினள், பைய நகும்.

     

     

    1099

    ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

     

    காதலார் கண்ணே உள.

     

     

    1100

    கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்

     

    என்ன பயனும் இல.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/