🏠

    பெரியாரைப் பிழையாமை 891-900 | Thirukkural, திருக்குறள் 891-900

     Thirukkural, திருக்குறள் 891-900 :-


    பெரியாரைப் பிழையாமை

     

    891

    ஆற்றுவார் ஆற்றல் இகழாமை; போற்றுவார்

     

    போற்றலுள் எல்லாம் தலை.

     

     

    892

    பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால்

     

    பேரா இடும்பை தரும்.

     

     

    893

    கெடல்வேண்டின், கேளாது செய்க-அடல் வேண்டின்,

     

    ஆற்றுபவர்கண் இழுக்கு!.

     

     

    894

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்-ஆற்றுவார்க்கு

     

    ஆற்றாதார் இன்னா செயல்.

     

     

    895

    யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்-வெந் துப்பின்

     

    வேந்து செறப்பட்டவர்.

     

     

    896

    எரியான் சுடப்படினும், உய்வு உண்டாம்; உய்யார்,

     

    பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

     

     

    897

    வகை மாண்ட வாழ்க்கையும், வான் பொருளும் என் ஆம்-

     

    தகை மாண்ட தக்கார் செறின்?.

     

     

    898

    குன்று அன்னார் குன்ற மதிப்பின், குடியொடு,

     

    நின்றன்னார் மாய்வர், நிலத்து.

     

     

    899

    ஏந்திய கொள்கையார் சீறின், இடை முரிந்து,

     

    வேந்தனும் வேந்து கெடும்.

     

     

    900

    இறந்து அமைந்த சார்புஉடையர் ஆயினும், உய்யார்-

     

    சிறந்து அமைந்த சீரார் செறின்.






      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/