கொடுங்கோன்மை 551-560 | Thirukkural, திருக்குறள் 551 - 560 |
Thirukkural, திருக்குறள் 551 - 560 :-
கொடுங்கோன்மை |
|
551 |
கொலை மேற்கொண்டாரின் கொடிதே-அலை மேற்கொண்டு |
|
அல்லவை செய்து ஒழுகும் வேந்து. |
|
|
552 |
வேலொடு நின்றான், ‘இடு’ என்றது போலும்- |
|
கோலொடு நின்றான் இரவு. |
|
|
553 |
நாள்தொறும் நாடி, முறைசெய்யா மன்னவன் |
|
நாள்தொறும் நாடு கெடும். |
|
|
554 |
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்-கோல் கோடி, |
|
சூழாது, செய்யும் அரசு. |
|
|
555 |
அல்லற்பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீர் அன்றே- |
|
செல்வத்தைத் தேய்க்கும் படை. |
|
|
556 |
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல், |
|
மன்னாவாம், மன்னர்க்கு ஒளி. |
|
|
557 |
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே, வேந்தன் |
|
அளி இன்மை வாழும் உயிர்க்கு. |
|
|
558 |
இன்மையின் இன்னாது, உடைமை-முறை செய்யா |
|
மன்னவன் கோற்கீழ்ப் படின். |
|
|
559 |
முறை கோடி மன்னவன் செய்யின், உறை கோடி |
|
ஒல்லாது, வானம் பெயல். |
|
|
560 |
ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர்;- |
|
காவலன் காவான் எனின். |