படை 761-770 | Thirukkural, திருக்குறள் 761 - 770 |
Thirukkural, திருக்குறள் 761 - 770 :-
படை |
|
761 |
உறுப்பு அமைந்து, ஊறு அஞ்சா, வெல் படை-வேந்தன் |
|
வெறுக்கையுள் எல்லாம் தலை. |
|
|
762 |
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண், தொலைவு இடத்து, |
|
தொல் படைக்கு அல்லால், அரிது. |
|
|
763 |
ஒலித்தக்கால் என் ஆம், உவரி எலிப்பகை? |
|
நாகம் உயிர்ப்ப, கெடும். |
|
|
764 |
அழிவு இன்று, அறைபோகாது ஆகி, வழிவந்த |
|
வன்கணதுவே-படை. |
|
|
765 |
கூற்று உடன்று மேல்வரினும், கூடி, எதிர் நிற்கும் |
|
ஆற்றலதுவே-படை. |
|
|
766 |
மறம், மானம், மாண்ட வழிச் செலவு, தேற்றம், |
|
என நான்கே ஏமம், படைக்கு. |
|
|
767 |
தார் தாங்கிச் செல்வது தானை-தலைவந்த |
|
போர் தாங்கும் தன்மை அறிந்து. |
|
|
768 |
அடல்தகையும், ஆற்றலும், இல் எனினும், தானை |
|
படைத் தகையான் பாடு பெறும். |
|
|
769 |
சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும், |
|
இல்லாயின் வெல்லும், படை. |
|
|
770 |
நிலை மக்கள் சால உடைத்துஎனினும், தானை |
|
தலைமக்கள் இல்வழி இல். |