🏠

    கேள்வி 411-420 | Thirukkural, திருக்குறள் 411 - 420

     Thirukkural, திருக்குறள் 411 - 420 :-



    கேள்வி

     

    411

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்

     

    செல்வத்துள் எல்லாம் தலை.

     

     

    412

    செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது,

     

    வயிற்றுக்கும் ஈயப்படும்.

     

     

    413

    செவியுணவின் கேள்வி உடையார், அவியுணவின்

     

    ஆன்றாரொடு ஒப்பர், நிலத்து.

     

     

    414

    கற்றிலன் ஆயினும் கேட்க; அஃது ஒருவற்கு

     

    ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை.

     

     

    415

    இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே-

     

    ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.

     

     

    416

    எனைத்தானும் நல்லவை கேட்க! அனைத்தானும்

     

    ஆன்ற பெருமை தரும்.

     

     

    417

    பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்-இழைத்து உணர்ந்து

     

    ஈண்டிய கேள்வியவர்.

     

     

    418

    கேட்பினும் கேளாத் தகையவே-கேள்வியால்

     

    தோட்கப் படாத செவி.

     

     

    419

    நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

     

    வாயினர் ஆதல் அரிது.

     

     

    420

    செவியின் சுவை உணரா, வாய் உணர்வின், மாக்கள்

     

    அவியினும் வாழினும் என்.

     

     




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/