இடன் அறிதல் 491-500 | Thirukkural, திருக்குறள் 491 - 500 |
Thirukkural, திருக்குறள் 491 - 500 :-
இடன் அறிதல் |
|
491 |
தொடங்கற்க எவ் வினையும்; எள்ளற்க-முற்றும் |
|
இடம் கண்டபின் அல்லது!. |
|
|
492 |
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் |
|
ஆக்கம் பலவும் தரும். |
|
|
493 |
ஆற்றாரும் ஆற்றி அடுப-இடன் அறிந்து |
|
போற்றார்கண் போற்றிச் செயின். |
|
|
494 |
எண்ணியார் எண்ணம் இழப்பர்-இடன் அறிந்து |
|
துன்னியார் துன்னிச் செயின். |
|
|
495 |
நெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின் |
|
நீங்கின், அதனைப் பிற. |
|
|
496 |
கடல் ஓடா, கால் வல் நெடுந் தேர்; கடல் ஓடும் |
|
நாவாயும் ஓடா, நிலத்து. |
|
|
497 |
அஞ்சாமை அல்லால், துணை வேண்டா-எஞ்சாமை |
|
எண்ணி இடத்தான் செயின். |
|
|
498 |
சிறு படையான் செல் இடம் சேரின், உறு படையான் |
|
ஊக்கம் அழிந்து விடும். |
|
|
499 |
சிறை நலனும் சீரும் இலர் எனினும், மாந்தர் |
|
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது. |
|
|
500 |
கால் ஆழ் களரில் நரி அடும், கண் அஞ்சா |
|
வேல் ஆள் முகத்த களிறு. |