X HOME

    • 1st Books

    • 2nd Books

    • 3rd Books

    • 4th Books

    • 5th Books

    • 6th Books

    • 7th Books

    • 8th Books

    • 9th Books

    • 10th Books

    • 11th Books

    • 12th Books

    • Question Paper

    • Jobs

    TN School Books

    கண்ணோட்டம் 571-580 | Thirukkural, திருக்குறள் 571 - 580

     Thirukkural, திருக்குறள் 571 - 580 :-

     

    கண்ணோட்டம்

     

              571

    கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

     

    உண்மையான், உண்டு இவ் உலகு.

     

     

            572

    கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃது இலார்

     

    உண்மை நிலக்குப் பொறை.

     

     

            573

    பண் என் ஆம், பாடற்கு இயைபு இன்றேல்?-கண் என் ஆம்,

     

    கண்ணோட்டம் இல்லாத கண்?.

     

     

            574

    உளபோல் முகத்து எவன் செய்யும்-அளவினால்

     

    கண்ணோட்டம் இல்லாத கண்.

     

     

            575

    கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃது இன்றேல்,

     

    புண் என்று உணரப்படும்.

     

     

            576

    மண்ணொடு இயைந்த மரத்து அனையர்-கண்ணொடு

     

    இயைந்து, கண்ணோடாதவர்.

     

     

            577

    கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்; கண் உடையார்

     

    கண்ணோட்டம் இன்மையும் இல்.

     

     

            578

    கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

     

    உரிமை உடைத்து, இவ் உலகு.

     

     

            579

    ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும், கண்ணோடிப்

     

    பொறுத்தாற்றும் பண்பே தலை.

     

     

             580

    பெயக் கண்டும், நஞ்சு உண்டு அமைவர்-நயத்தக்க

     

    நாகரிகம் வேண்டுபவர்.






     TN SCHOOL BOOKS PDF DOWNLOAD

    1st Books
    2nd Books
    3rd Books
    4th Books
    5th Books
    6th Books
    7th Books
    8th Books
    9th Books
    10th Books
    11th Books
    12th Books
    Question Paper
    Latest Info
    Tamilnadu Jobs
     
    Tamilnadu School Books | Tamilnadu School Books 2021 | TN School EBooks | TN Textbooks | Tamilnadu School Textbooks | Tamilnadu School Books 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th | Tamilnadu New School Text Books Free Download PDF Samacheer Kalvi Tamil English Medium TN School eBook