🏠

    உறுப்பு நலன் அழிதல் 1231-1240 | Thirukkural, திருக்குறள் 1231-1240

     Thirukkural, திருக்குறள் 1231-1240 :-


    உறுப்பு நலன் அழிதல்

     

    1231

    சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி,

     

    நறு மலர் நாணின, கண்.

     

     

    1232

    நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்-

     

    பசந்து பனி வாரும் கண்.

     

     

    1233

    தணந்தமை சால அறிவிப்ப போலும்-

     

    மணந்த நாள் வீங்கிய தோள்.

     

     

    1234

    பணை நீங்கிப் பைந் தொடி சோரும்-துணை நீங்கித்

     

    தொல் கவின் வாடிய தோள்.

     

     

    1235

    கொடியார் கொடுமை உரைக்கும்-தொடியொடு

     

    தொல் கவின் வாடிய தோள்.

     

     

    1236

    தொடியொடு தோள் நெகிழ நோவல்-அவரை,

     

    ‘கொடியர்’ எனக் கூறல் நொந்து.

     

     

    1237

    பாடு பெறுதியோ-நெஞ்சே!-கொடியார்க்கு என்

     

    வாடு தோட் பூசல் உரைத்து?.

     

     

    1238

    முயங்கிய கைகளை ஊக்க, பசந்தது-

     

    பைந் தொடிப் பேதை நுதல்!.

     

     

    1239

    முயக்கிடைத் தண் வளி போழ, பசப்பு உற்ற-

     

    பேதை பெரு மழைக்கண்.

     

     

    1240

    கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே-

     

    ஒள் நுதல் செய்தது கண்டு.



      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/