சிற்றினம் சேராமை 451-460 | Thirukkural, திருக்குறள் 451 - 460 | 
Thirukkural, திருக்குறள் 451 - 460 :-
| 
 சிற்றினம் சேராமை  | 
 
  | 
| 
 451  | 
 சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்  | 
| 
 
  | 
 சுற்றமாச் சூழ்ந்துவிடும்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 452  | 
 நிலத்து இயல்பான் நீர் திரிந்து, அற்று ஆகும்;- மாந்தர்க்கு  | 
| 
 
  | 
 ‘இனத்து’ இயல்பது ஆகும், அறிவு.  | 
| 
 
  | 
 
  | 
| 
 453  | 
 மனத்தான் ஆம், மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான் ஆம்,  | 
| 
 
  | 
 ‘இன்னான்’ எனப்படும் சொல்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 454  | 
 மனத்து உளது போலக் காட்டி, ஒருவற்கு  | 
| 
 
  | 
 இனத்து உளது ஆகும்-அறிவு.  | 
| 
 
  | 
 
  | 
| 
 455  | 
 மனம் தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும்  | 
| 
 
  | 
 இனம் தூய்மை தூவா வரும்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 456  | 
 மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்; இனம் தூயார்க்கு  | 
| 
 
  | 
 இல்லை, நன்று ஆகா வினை.  | 
| 
 
  | 
 
  | 
| 
 457  | 
 மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம்; இன நலம்  | 
| 
 
  | 
 எல்லாப் புகழும் தரும்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 458  | 
 மன நலம் நன்கு உடையர் ஆயினும், சான்றோர்க்கு  | 
| 
 
  | 
 இன நலம் ஏமாப்பு உடைத்து.  | 
| 
 
  | 
 
  | 
| 
 459  | 
 மன நலத்தின் ஆகும், மறுமை; மற்று அஃதும்  | 
| 
 
  | 
 இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.  | 
| 
 
  | 
 
  | 
| 
 460  | 
 நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை; தீ இனத்தின்  | 
| 
 
  | 
 அல்லற்படுப்பதூஉம் இல்.  |