🏠

    பகைத் திறம் தெரிதல் 871-880 | Thirukkural, திருக்குறள் 871-880

     Thirukkural, திருக்குறள் 871-880 :- 


    பகைத் திறம்

    தெரிதல்

     

    871

    பகை என்னும் பண்புஇலதனை, ஒருவன்

     

    நகையேயும், வேண்டற்பாற்று அன்று.

     

     

    872

    வில் ஏர் உழவர் பகை கொளினும், கொள்ளற்க-

     

    சொல் ஏர் உழவர் பகை!.

     

     

    873

    ஏமுற்றவரினும் ஏழை-தமியனாய்ப்

     

    பல்லார் பகை கொள்பவன்.

     

     

    874

    பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்

     

    தகைமைக்கண் தங்கிற்று, உலகு.

     

     

    875

    தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்

     

    இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று!.

     

     

    876

    தேறினும், தேறாவிடினும், அழிவின்கண்

     

    தேறான் பகாஅன் விடல்!.

     

     

    877

    நோவற்க, நொந்தது அறியார்க்கு! மேவற்க,

     

    மென்மை, பகைவரகத்து!.

     

     

    878

    வகை அறிந்து, தற் செய்து, தற் காப்ப, மாயும்-

     

    பகைவர்கண் பட்ட செருக்கு.

     

     

    879

    இளைதாக முள்மரம் கொல்க- களையுநர்

     

    கை கொல்லும் காழ்த்த இடத்து!.

     

     

    880

    உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற-செயிர்ப்பவர்

     

    செம்மல் சிதைக்கலாதார்.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/