🏠

    நெஞ்சொடு கிளத்தல் 1241-1250 | Thirukkural, திருக்குறள் 1241-1250

    Thirukkural, திருக்குறள் 1241-1250 :-

    நெஞ்சொடு கிளத்தல்

     

    1241

    நினைத்து ஒன்று சொல்லாயோ-நெஞ்சே!-எனைத்து ஒன்றும்

     

    எவ்வ நோய் தீர்க்கும் மருந்து?.

     

     

    1242

    காதல் அவர் இலர் ஆக நீ நோவது

     

    பேதைமை-வாழி, என் நெஞ்சு!.

     

     

    1243

    இருந்து உள்ளி, என் பரிதல்?-நெஞ்சே!-பரிந்து உள்ளல்

     

    பைதல் நோய் செய்தார்கண் இல்.

     

     

    1244

    கண்ணும் கொளச் சேறி-நெஞ்சே!-இவை என்னைத்

     

    தின்னும், அவர்க் காணல் உற்று!.

     

     

    1245

    செற்றார் எனக் கைவிடல் உண்டோ-நெஞ்சே!-யாம்

     

    உற்றால் உறாஅதவர்?.

     

     

    1246

    கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால், புலந்து உணராய்;

     

    பொய்க் காய்வு காய்தி-என் நெஞ்சு.

     

     

    1247

    காமம் விடு, ஒன்றோ; நாண் விடு-நல் நெஞ்சே!-

     

    யானோ பொறேன், இவ் இரண்டு.

     

     

    1248

    பரிந்து அவர் நல்கார் என்று, ஏங்கி, பிரிந்தவர்-

     

    பின் செல்வாய்; பேதை-என் நெஞ்சு.!

     

     

    1249

    உள்ளத்தார் காதலவர் ஆக, உள்ளி நீ

     

    யாருழைச் சேறி?- என் நெஞ்சு!.

     

     

    1250

    துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா,

     

    இன்னும் இழத்தும், கவின்.





      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/