அமைச்சு 631-640 | Thirukkural, திருக்குறள் 631 - 640 |
Thirukkural, திருக்குறள் 631 - 640 :-
அமைச்சு |
|
631 |
கருவியும், காலமும், செய்கையும், செய்யும் |
|
அருவினையும், மாண்டது-அமைச்சு. |
|
|
632 |
வன்கண், குடிகாத்தல், கற்று அறிதல், ஆள்வினையோடு |
|
ஐந்துடன் மாண்டது-அமைச்சு. |
|
|
633 |
பிரித்தலும், பேணிக்கொளலும், பிரிந்தார்ப் |
|
பொருத்தலும், வல்லது-அமைச்சு. |
|
|
634 |
தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச் |
|
சொல்லலும் வல்லது-அமைச்சு. |
|
|
635 |
அறன் அறிந்து, ஆன்று அமைந்த சொல்லான், எஞ்ஞான்றும் |
|
திறன் அறிந்தான், தேர்ச்சித் துணை. |
|
|
636 |
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதி நுட்பம் |
|
யா உள, முன் நிற்பவை?. |
|
|
637 |
செயற்கை அறிந்தக்கடைத்தும், உலகத்து |
|
இயற்கை அறிந்து, செயல்!. |
|
|
638 |
அறி கொன்று, அறியான் எனினும், உறுதி |
|
உழையிருந்தான் கூறல் கடன். |
|
|
639 |
பழுது எண்ணும் மந்திரியின், பக்கத்துள் தெவ் ஓர் |
|
எழுபது கோடி உறும். |
|
|
640 |
முறைப்படச் சூழ்ந்தும், முடிவிலவே செய்வர்- |
|
திறப்பாடு இலாஅதவர். |