தெரிந்து செயல் வகை 461-470 | Thirukkural, திருக்குறள் 461 - 470 |
Thirukkural, திருக்குறள் 461 - 470 :-
தெரிந்து செயல் வகை |
|
461 |
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும் |
|
ஊதியமும் சூழ்ந்து, செயல்!. |
|
|
462 |
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு |
|
அரும் பொருள் யாது ஒன்றும் இல். |
|
|
463 |
ஆக்கம் கருதி, முதல் இழக்கும் செய்வினை |
|
ஊக்கார், அறிவு உடையார். |
|
|
464 |
தெளிவு இலதனைத் தொடங்கார்-இளிவு என்னும் |
|
ஏதப்பாடு அஞ்சுபவர். |
|
|
465 |
வகை அறச் சூழாது எழுதல், பகைவரைப் |
|
பாத்திப் படுப்பது ஓர் ஆறு. |
|
|
466 |
செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க |
|
செய்யாமையானும் கெடும். |
|
|
467 |
எண்ணித் துணிக, கருமம்; துணிந்தபின், |
|
எண்ணுவம் என்பது இழுக்கு. |
|
|
468 |
ஆற்றின் வருந்தா வருத்தம், பலர் நின்று |
|
போற்றினும், பொத்துப்படும். |
|
|
469 |
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு-அவரவர் |
|
பண்பு அறிந்து ஆற்றாக்கடை. |
|
|
470 |
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்-தம்மொடு |
|
கொள்ளாத கொள்ளாது உலகு. |