🏠

    12th Advanced Tamil question paper | 12ஆம் வகுப்பு - சிறப்புத் தமிழ் வினாத்தாள்

    12-ஆம் வகுப்பு - சிறப்புத் தமிழ் - இயல் 1 & 2 வினாத்தாள்

    12-ஆம் வகுப்பு - சிறப்புத் தமிழ் (Advanced Tamil)

    இயல் 1 & 2 வினாத்தாள்
    வகுப்பு: 12 பாடம்: சிறப்புத் தமிழ் இயல்: 1, 2
    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
    1. சரியான தொடரைக் கண்டறிக.
    அ) கவிதையில் முதற்பொருள் இன்றியமையாதது.
    ஆ) கவிதையில் மையப்பொருள் இன்றியமையாதது.
    இ) கவிதையில் உரிப்பொருள் இன்றியமையாதது.
    ஈ) கவிதையில் கருப்பொருள் இன்றியமையாதது.
    2. இலக்கிய உருவாக்கத்தை இதன் வழியாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார்:
    அ) காப்பியம்
    ஆ) நாடகம்
    இ) இலக்கணம்
    ஈ) இசைவடிவம்
    3. சரியான கூற்றைக் காண்க.
    • 1. படைப்பாளன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் கவிதை.
    • 2. பேசுபவர், எதிர் வினையாற்றுபருக்கான உரையாடல் வடிவம் நாடகம்.
    • 3. படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கதை.
    • 4. படைப்பாளன் தன்கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் கட்டுரை.
    அ) 1, 4 சரி
    ஆ) 1, 3 சரி
    இ) 2, 3, 4 சரி
    ஈ) அனைத்தும் சரி
    4. தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை:
    அ) இடைக்கால இலக்கியங்கள்
    ஆ) பக்தி இலக்கியங்கள்
    இ) சங்க இலக்கியங்கள்
    ஈ) இக்கால இலக்கியங்கள்
    5. பழந்தமிழர்:
    • 1. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர்.
    • 2. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் களவொழுக்கம் என்றனர்.
    • 3. திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர்.
    • 4. திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் களவொழுக்கம் என்றனர்.
    அ) 1, 2 சரி
    ஆ) 1, 3 சரி
    இ) 1, 4 சரி
    ஈ) 2, 3 சரி
    6. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்றுகளைக் கண்டறிக.
    • 1) மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே அறம்.
    • 2) சான்றோர் விலக்கியன ஒழித்தல் அறம்.
    • 3) தீமையை நீக்குவது அல்லது அறுப்பது அறம்.
    • 4) சான்றோர் விதித்தன செய்தல் அறம்.
    அ) 1, 2, 3 சரி
    ஆ) 2, 3, 4 சரி
    இ) 1, 2, 4 சரி
    ஈ) அனைத்தும் சரி
    7. உவகை என்ற மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய களமாகத் தொல்காப்பியர் கூறுவது:
    அ) பெருமை
    ஆ) புதுமை
    இ) கொடை
    ஈ) விளையாட்டு
    8. தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்கள் வருந்திப்பாடுவதாக அமைந்த துறை:
    அ) கையறுநிலை
    ஆ) செவியறிவுறூஉ
    இ) பொருண்மொழிக்காஞ்சி
    ஈ) இயன்மொழி
    9. 'தாமிருந்த கோடு குறைத்து விடல்' - இப்பழமொழியின் பொருள்:
    அ) தன் வீட்டிலுள்ள சுற்றத்தாரை வெளியேற்றிவிடுதல்.
    ஆ) தான் தங்கியிருக்கும் வீட்டின் உயரத்தைக் குறைத்தல்.
    இ) தான் தங்கியிருக்கும் கிளையை வெட்டி தானும் வீழ்ந்து உயிர் விடல்.
    ஈ) தன் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடல்.
    10. பொருந்தாத இணையக்கண்டறிக:
    அ) இன்னா நாற்பது - கபிலர்
    ஆ) இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
    இ) ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
    ஈ) சிறுபஞ்சமூலம் - கூடலூர் கிழார்
    11. கூற்று : குடிமக்கள் காப்பியம் என்று சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது.
    காரணம் : குடிமக்கள் ஆட்சியை இக்காப்பியம் வலியுறுத்துகிறது.
    அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
    ஆ) கூற்று தவறு, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
    இ) கூற்று சரி, காரணம் தவறு. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
    ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
    12. பன்னிரு திருமுறைகளை ______ நாயன்மார் பாடியுள்ளனர்.
    அ) 63
    ஆ) 87
    இ) 72
    ஈ) 27
    13. பொருத்துக:
    1. சம்பந்தர் அ) தோழமை நெறி
    2. குலசேகராழ்வார் ஆ) பிள்ளைமை நெறி
    3. சுந்தரர் இ) அடிமை நெறி
    4. திருமங்கையாழ்வார் ஈ) நாயகன் நாயகி நெறி
    i) 1-இ, 2-ஆ, 3-அ, 4-ஈ
    ii) 1-ஆ, 2-இ, 3-அ, 4-ஈ
    iii) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ
    iv) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
    14. சொற்றொடர்நிலை என்பது:
    அ) பரணி
    ஆ) கலம்பகம்
    இ) அந்தாதி
    ஈ) தூது
    15. திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியவர்:
    அ) குமரகுருபரர்
    ஆ) புகழேந்திப்புலவர்
    இ) வீரமாமுனிவர்
    ஈ) ஒட்டக்கூத்தர்
    II. குறுவினா
    1. முதற்பொருள் என்பவை யாவை?
    2. அரிஸ்டாட்டில் வரையறை செய்யும் மூவோர்மைகள் எவை?
    3. கையறுநிலை என்பது யாது?
    4. பழந்தமிழர் வாணிகத்தை எவ்வாறு வகைப்படுத்தினர்?
    5. கூடாவொழுக்கம் என்றால் என்ன?
    6. சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் யாவை?
    7. மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் யாவை?
    8. காப்பியத்தின் பெரும்பிரிவும் உட்பிரிவும் எவ்வாறு பெயரிடப்பட்டன?
    9. முக்குற்றங்கள் எனப் பௌத்தம் குறிப்பிடுவன யாவை?
    10. சிற்றிலக்கியங்களின் வகைகளுள் எவையேனும் நான்கினை எழுதுக.
    III. சிறுவினா
    1. தொல்காப்பியர் குறிப்பிடும் உரிப்பொருள்கள் ஏழனைக் குறிப்பிடுக.
    2. ஓரையாடுதல் - குறிப்பு வரைக.
    3. அன்றாட செயல்களை எவ்வாறு தொடங்கவேண்டும் என ஆசாரக்கோவைப் பாடல் கூறுகிறது?
    4. ஒழுக்கமுடையோரும் இல்லாதாரும் எய்தும் நிலையாக விவேகசிந்தாமணி கூறுவன யாவை?
    5. கலம்பகம் - சிறு குறிப்பு தருக.
    IV. நெடுவினா
    1. தமிழ்க்கவிதையின் போக்குகள் குறித்து விவரி.
    2. சங்ககால வணிகம் சிறந்திருந்தது என்பதை பட்டினப்பாலை வழி நின்று விளக்குக.
    3. 'புறப்புண் நாணி வடக்கிருந்தோனே' - இடஞ்சுட்டி விளக்குக.
    4. நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் எவ்வாறு விளக்குகிறார்?
    5. இரட்சகர் எனப்போற்றப்படுபவர் யார்? இரட்சணிய யாத்திரிக வழிநின்று எழுதுக.
    --- வினாத்தாள் முடிவு ---
      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • 12th tamil study material | 12th tamil important notes

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • NUMBERS 1 TO 1000 IMAGES

    • k, ka, kaa, ki, kee, ku, koo, ke, kae, kai, ko, koa, kow hd images

    • PRESCHOOL NUMBERS WORKSHEET

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

    • ENGLISH TYPING | ENGLISH TYPING POSTER

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/