Vadapalani Andavar Temple Vadapalani Chennai details |
வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழனி சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. 2. ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் மிகவும் புகழ் பெறுவதாயிற்று, அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர். கோயில் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின. இந்நிலையில் 1931-ம் ஆண்டு புரட்டாசித் திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் பழநியாண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார் 3.இத்திருக்கோயில் மூலவர் பாத காலணிகளுடன் அருள்பாலிப்பது சிறப்பு. வேறு எந்த படைவீட்டிலும் காண முடியாது. பாத காலணிகள் அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. இத்திருக்கோயிலின் மூலவரின் வலது காலானது சற்று முன்வந்தது போல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை இக்கலியுகத்தில் விரைந்து வந்து வடபழனி ஆண்டவர் உடன் நீக்குவதாக ஐதீகம். |