Parthasarathy Swamy Temple Triplicane Chennai details |
பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் திருவல்லிக்கேணி சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. இந்த திருக்கோயில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கும், எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், தென்கிழக்கில் சுமார் இரண்டு மைல் தூரத்தில் மெரீனா கடற்கரைக்கு அருகாமையில் திருமங்கை மன்னன் மங்களாஸாஸனம் செய்தபடி திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் சன்னதியாக விளங்குகிறது. 2. திருஅல்லிக்கேணி என்றும் தற்காலம் திருவல்லிக்கேணி என்று வழங்கப்பட்டும் 3.நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகி, பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கைமன்னன் ஆகிய மூவர்கள் பன்னிரண்டு பாசுரங்களால் சிறப்பிக்கப்பட்ட திருத்தலம் ஆகும். |