Karabathira Samy Temple Vysarpadi Chennai details |
கரபத்ர சுவாமிகள் மடம், வியாசர்பாடி, சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | கரபத்ர சுவாமிகள் மடம், வியாசர்பாடி, சென்னை |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. வடசென்னைலுள்ள, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள மடாலயம் ஆகும் . 2. கல்வெட்டில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் கலியுகாதி 5019-ஆம் ஆண்டு பிங்கள வருடம் பங்குனி மாதம் 22-ம் நாள் (4-4-1918) குருவாரம் உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்களின் சமாதி கர்பக்கிரகத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது. 3.டைந்தார்கள் அன்னவர்கள் சமாதி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன்மீது பலீபீடம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள், ஆனந்தாசிரமம் என்ற சாது சங்கத்தை இங்கு அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார். தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். |