Aathimoola perumal Temple Vadapalani Chennai details |
அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில், வடபழநி, சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில், வடபழநி, சென்னை - 600026 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் ஸ்தலைப்பெருமை, ஆடிபௌர்ணமி அன்று நடத்தப்பட்டு வரும் கஜேந்திர மோட்சம் கருட வாகனம் இங்கு விசேஷம். இப்பெருமானை புதன்கிழமை தோறும் வந்து தரிசிப்பதால் நம் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, செல்வம், உத்யோகம், புதிய தொழில் செழிக்க, வியாபாரம் அபிவிருத்தி அடைய, கடன் தொல்லைகள் நீங்க தீராத வழக்குகளில் தீர்வு ஏர்ப்பட, வெளிநாடு செல்ல, சரீர உபாதைகள் நீங்க, பில்லி சூன்யம் அகல, குடும்ப பிரச்சனை மற்றும் நாகதோஷம் மற்றும் நவக்கிரஹ தோஷம் நிவர்த்தி பெற, முக்கியமாக பகைவர்கள் பயம் போன்றவர்றிற்கு பலன் கிடைக்கும். 2. நடை திறக்கும் நேரம் : 06:00 AM IST - 11:30 AM IST, EVE 04:30 PM IST - 08:30 PM IST, நடை சாற்றும் நேரம் : 11:30 AM IST - 04:30 PM IST, வைகுண்டங்காதசி அன்று நடை முழுநேரம் திறந்திருக்கும் 3. உபசன்னதிகள் : ஸ்ரீ ஆதிலக்ஷ்மி தாயார் சன்னதி, கருடாழ்வார் 4. தல பெருமை : யானை தினமும் குளத்தில் நீராடி தாமரை புஷ்பங்களை பறித்து பெருமாளுக்கு சாற்றி பூஜை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் ராடிகொண்டிருந்த யானையை முதலை ஒன்று யானையின் கால்களை கவ்விகொண்டது.முதலை பிடியில் சிக்கிய யானை தன் பலத்தை கொண்டு பல ஆயிரம் வருடங்கள் போராடிய யானை வாலி பொறுக்க முடியாமல் தன்னையும் அறியாமல் ஆதிமூலமே என பிளரியது, யானை ஏதோ இதுவரை கேட்காத பெயரை கூறுகிறதே என்று பிரம்மாதி முனிவர்கள் முக்கோடி தேவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மஹாவிஷ்ணு கரூட வாகனத்தில் முக்கோடி தேவர்களுக்கு காட்சி அளித்து தன்னுடைய சக்ரா ஆயுதத்தால் முதலையின் சிரசை துண்டித்து யானைக்கு மோட்சம் அளித்த புராணமே கஜேந்திர மோட்சம் இந்த சம்பவத்தை இன்றும் பல வைஷ்ணவ திருக்கோவில்களில் வருடம் ஒருமுறை கஜேந்திர மோட்சத்தை இதே பெயருடன் உத்ஸவமாக நடத்தி வருகின்றனர். அப்பேர்ப்பட்ட கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த வரதராஜ பெருமாள் வடபழனி இத்திருதலத்தில் நமக்காக ஆதிமூலமே என்று யானை அழைத்த பேரில் இங்கே வீற்றிருப்பது மிக விஷேசம் மூலவர் பெருமைஅமர்ந்த நிலையில் சிம்மாசன பீடத்தில் மூலஸ்தானத்தில் ஆதிமூலப் பெருமாள் நம்மை ரட்சிக்கும் பொருட்டு இடது கையை நம்மை அழைத்து ஆஸ்வனா ஹஸ்தம். வலது கையால் அபயம் அளிப்பது. 5. பேருந்து நிலையம் கோயம்பேடு தூரம் (கிமீ) 3, பேருந்து நிலையம் வடபழனி பேருந்து நிலையம் தூரம் (கிமீ) 2 7. தொடர்புக்கு : பழநியாண்டவர் கோயில் தெரு, - 600026.தொலைபேசி எண் : 8072398360 |