ஆலமரத்துல விளையாட்டு | Aalamarathula vilaiyaattu |
ஆலமரத்துல விளையாட்டு
ஆலமரத்துல விளையாட்டு
அணிலே அணிலே கைதட்டு
குக்கூ குக்கூ குயில்பாட்டு
கொஞ்சும் கிளியே தலையாட்டு
குட்டிக்குரங்கே வாலாட்டு
குள்ள நரியே தாலாட்டு
சின்ன முயலே மேளங்காட்டு
சிங்கக்குட்டியே தாளந்தட்டு
எல்லாரும் தான் ஆடிக்கிட்டு
ஏலேலேலா பாடிக்கிட்டு
ஒன்றாகத்தான் சேர்ந்துகிட்டு
ஓடிவாங்க துள்ளிக்கிட்டு