அப்பம் பழமொழிகள் | appam Tamil Proverbs |
அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு.
அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும்.
அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ: அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ
அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம்.
அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்-
அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில்-
அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு) தானை தைத்துக் கொள் பிராம்மணா.
அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா
அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல.
அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி.
அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்;
உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும்.
அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா?
அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர்
அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது,
அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா?
அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான்:
அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான்.
அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது.
அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை,
அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா,
அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம்
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்.
அப்பனுக்கு மூத்த சுப்பன்,