திணை அடிப்படையில் பெயர்கள் | Thinai Vagaigal |
திணை அடிப்படையில் பெயர்கள் :
உயர்திணை, அ.ஃ.றிணை எனும் இரு பிரிவுகளுள் அனைத்துப் பெயர்களும் அடங்கும்.
உயர்திணைப் பெயர்கள்:
மக்கள், நரகர், தேவர், போன்றோரைக் குறிக்கும் பெயர்கள் உயர்திணைப் பெயர்கள் எனப்படும்.
உ-ம் தொழிலாளர்கள், நாகன், அமரன், சிவகாமி.
அஃறிணைப் பெயர்கள் :
உயர்திணை அல்லாத திணையாகிய ௮ஃறிணையில் மக்கள், நரகர், தேவர், தவிர்ந்த அனைத்து உயிர்ப்பொருள்களும், சடப்பொருள்களும் அடங்கும். பறவைகள், மிருகங்கள் முதலியவை, குழந்தைகள், மரஞ்செடி கொடிகள் என்பன நிலம், நீர், தீ, வீடு, புத்தகம் முதலியன அனைத்தையும் குறிப்பன ௮ஃறிணைப் பெயர்களே.
பால் அடிப்படையில் பெயர்கள் :
எல்லாப் பெயர்களும் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனும் ஐந்து பிரிவுகளுள் அடங்கும்.
ஆண்பாற் பெயர்கள் :
உயர்திணைப் பெயர்கள் மட்டுமே ஆண்பால், பெண்பால், பலர்பால் எனப்பகுக்கப்படும். எனவே மக்கள், நரகர், தேவரில் ஓர் ஆணைக்குறிக்கும் பெயர் ஆண்பாற்பெயராகும்.
உ-ம் செல்லையன், ஆறுமுகன், இந்திரன், எழிலன், எவன்
பெண்பாற் பெயர்கள் :
உயர்திணைக்குள் ஒரு பெண்ணைக் குறிக்கும் யெயர் பெண்பாற்பெயர் எனப்படும்.
உரம் வள்ளி, இந்திராணி, மகள், பேர்த்தி
பலர்பாற் பெயர்கள் :
உயர்திணையில் ஒருவர்க்கு அதிகமான ஆண்களையோ, பெண்களையோ, ஆண், பெண் கலந்த கூட்டத்தினரையோ குறிக்கும் பெயர்கள் பலர்பாற் பெயர்கள் எனப்படும்.
உம் மாணவியர், வீரர், தமிழர், மக்கள், பேதையர்.
ஒன்றன்பாற் பெயர்கள் :
௮ஃறிணைப் பொருள் ஒவ்வொன்றையும் குறிக்கும் பெயர் ஒன்றன்பாற் பெயராகும். உ-ம் ஒரு பறவை, ஒரு மரம், பாம்பொன்று, ஒரு மனை, ஓர் ஓடை. மேலும் குழந்தை, சிசு என்பனவும் ஒன்றன்பாலாகவே கொள்ளப்படும். ஓர் ௮ஃறிணை ஆணும் (சேவல், கடா, எருது) அல்லது ஓர் ௮ஃறிணைப் பெண்ணும் (பேடு, மறி, பசு) ஒன்றன் பாலாகவே கொள்ளப்படுவது தமிழிலக்கண மரபு. இவை அ..நிணை ஆண் என்றும், ௮ஃறிணைப் பெண் என்றும் மட்டுமே சுட்டப்படுவது இலக்கண மரபு.
பலவின் பாற் பெயர்கள்
அஃ.றிணைப் பல பொருட்களைக் குறிக்கும் பெயர்கள் யாவும் பலவின்பாற் பெயர்களே.
உ-ம் விலங்குகள், வேலிகள், புட்கள், குடிசைகள், பூக்கள், குழந்தைகள்.
பால் பகா ௮ஃறிணைப் பெயர்கள்
௮ஃறிணையில் தனிச் சொல்லாக, ஒருமை வடிவில் நிற்கும் அஃறிணைப் பெயர் அந்நிலையில் ஒன்றன்பாலோ பலவின்பாலோ எனப் பகுக்கப்பட முடியாதது. அதனால் அது (மரம், மீன்) பால்பகா ௮ஃறிணை எனப் பெயர் பெற்றது. அப்பெயர் ஒருமை வினை ஏற்றால் (மரம் விழுந்தது) ஒன்றன்பாற் பெயரெனக் கொள்ளப்படும். பன்மை வினை ஏற்று நின்றால் (மீன் நீந்தின) பலவின்பாற் பெயரெனக் கொள்ளப்படும்.
உயர்திணைப் பாற் பொதுப் பெயர்கள்:
பேதை , ஊமை போன்ற உயர்திணைப் பெயர்கள் ஆணைக்குறித்தும் வரும்: (பேதை சிரித்தான், ஊமை திணறினான்) பெண்ணைக் குறித்தும் வரும்: (பேதை நம்பினாள், ஊமை அழுதாள்) இவை போன்ற சொற்கள் உயர்திணைப் பாற் பொதுப் பெயர்கள் எனப்படும். உரம்:
செவியிலி, அகதி, எதிரி, ஏழை, அநாதை, பாவி, சோம்பேறி, அறிவாளி, துரோகி, வாதி, பிரதிவாதி, நோயாளி, குற்றவாளி, பிள்ளை, உலோபி, ஏமாளி.
மேலுஞ் சில பாற் பொதுப் பெயர்கள் :
உபகாரி, சூத்திரதாரி, வாயாடி, தற்குறி, விருந்தாளி, மருந்தாளி, நீதிபதி, நியாயவாதி, சட்டத்தரணி, விவேகி, புத்திசாலி, அதிஷ்டசாலி, கடனாளி, பகையாளி, உழைப்பாளி, தொழிலாளி, முதலாளி, முன்னோடி,வழிகோலி, கொண்டோடி, பாட்டாளி, நாடோடி, பிரயாணி, பிரயாசி, நிரபராதி, சுழியோடி, பயங்கொள்ளி, தொடைநடூங்கி, காவலாளி, கண்காணி, படிப்பாளி, கொடையாளி, அடிமை, பங்காளி, வயதாளி.
இருதிணை மூவீடப் பொதுப் பெயர்:
எல்லாம் என்ற பெயர்ச் சொல் அவர் எல்லாம் என்று உயர்திணையிலும், அவை எல்லாம் என்று ௮ஃறிணையிலும் வந்து திணைப் பொதுப் பெயராயிற்று. அவ்வாறே நாமெல்லாம், நீவிரெல்லாம், அவரெல்லாம் என வந்து மூவிடப் பொதுப் பெயராகவும் பயன்படுகிறது.
இருதிணைப் பொதுப் பெயர்கள்: (வீரவுத்திணை )
தாய், குருடு நொண்டி, செவிடு, .மலடு, முதலிய பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை பன்மை அடிப்படையில் பெயர்கள் :
எல்லா வகைப் பெயர்களும் ஒருமைப் பெயர்கள்,
பன்மைப் பெயர்கள் என இரு வகைப்படும்.
ஒருமைப் பெயர்கள் :
உயர்திணைக்குள் ஒருவர் (கந்தன், குமாரி) குறிக்கும் பெயராயினும் சரி, ௮ஃறிணைக்குள் ஒன்று (கடல், பந்து) குறிக்கும் பெயராயினும் சரி, ஒரு குழுவை, ஓர் இனத்தை, இயக்கத்தை, கட்சியை, சபையை, கழகத்தை, தொழிலைக் குறிக்கும் (தமிழினம், கவிஞர் சங்கம், தொண்டர் சமை பெயராயினும் சரி அது ஒருமைப் பெயர் எனப்படும்.
பன்மைப் பெயர்கள் :
உயர்திணையிலும் அ.'.றிணையிலும் ஒன்றிற்கு மேற்பட்ட பொருட்களையும், குழுக்கள், இனங்கள், முதலானவற்றையும் குறிக்கும் பெயர்கள் பன்மைப் பெயர்களாம். உம் தபசியர், கட்சிகள்.