சிறப்புப் பெயர்கள் | sirappu peyargal |
சிறப்புப் பெயர்கள் :
தனிப்பட்ட ஒரு பொருளையோ, இடம் முதலான- வற்றையோ, உபகுழுவையோ, பிரித்துணர்த்திச் சிறப்பாகச் சுட்டுவது சிறப்புப் பெயராகும். பலா, மான், குயில், உழவர் என்பன முன்பு காட்டிய பொதுப்பெயர் உதாரணங்களின் சிறப்புப் பெயர்களாதல்: காண்க.
இட அடிப்படையில் பெயர் வகைகள்:
பெயர்ச்சொற்கள், தன்மைப் பெயர்கள், முன்னிலைப் பெயர்கள், படர்க்கைப் பெயர்கள் என மூன்று வகை இடப்பெயர்களாகவும் வகுக்கப்படும்.
தன்மைப் பெயர்கள்:
நான், யான், அடியேன், சிறியேன், ஏழையேன், நாயேன், என்னுந் தன்மை ஒருமைப் பெயர்களும், நாம், யாம், அடியோம், சிறியோம், ஏழையோம், நாயோம், என்னும் தன்மைப் பன்மைப் பெயர்களும், நானும் நீயும், அவனும் முதலிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மைகளும் தன்மை இடத்தனவாம். இந்த ஒருமைப் பெயர்கள் யாவும் ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டுக்கும் பொதுவானவை.
திணைப் பொதுமை
பறவைகள், மிருகங்கள் முதலிய அ.'.றிணை வர்க்கங் களும். பேசுவதாகப் புனைகதைகள், கவிதைகள் உள்ளன. அதனால் தன்மை, முன்னிலைப் பெயர்கள் உயர்திணைக்கன்றி அ..றிணைக்கும் உரியனவாக திணைப்பொதுவாக வழங்கு- கின்றன.
முன்னிலைப் பெயர்கள்:
என்னும் முன்னிலை ஒருமைப் பெயரும், நீயிர், நீவிர், நீங்கள் பெரியீர், நல்லீர், எல்லீரும் எனும் முன்னிலைப் பன்மைகளும், நீயும் அவனும், இவனும் முதலிய உளப்பாட்டு முன்னிலைப் பன்மைகளும் முன்னிலை இடத்தனவாம். இவை இருதிணைக்கும், ஆண் பெண் பால்களுக்கும் பொதுவாகி வரும். பல்லாயிரம் மைல்கள் இடைவெளியிலிருந்து இருவர் தொலைபேசி மூலம் பேசும் பொழுதும் அவர்கள் ஒருவருக்கொ- ரவர் முன்னிலைதான்.
படர்க்கைப் பெயர்கள் :
தன்மைப் பெயர்கள், முன்னிலைப் பெயர்கள் தவிர்ந்த இவன், இது, கணேசன், சிட்டு, அது, எழிலி உட்பட்ட பெயர்கள் அனைத்தும் படர்க்கைப் பெயர்களே.