பெயர்ச் சொல்லின் பொது இலக்கணம் | peyar sollin pothu ilakkanam |
பெயர்ச் சொல்லின் பொது இலக்கணம்
1. இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைத் தனித்தனியே குறிக்கும் குறியீடுகளாக விளங்குவது பெயர்ச் சொல்லின் பொது இலக்கணம். பெயர்ச் சொல்லின் சிறப்பிலக்கணம் :
பெயர்ச்சொற்களின் சிறப்பிலக்கணமாவது வேற்றுமை உரு பேற்றலாகும்.
இன்னோர் அடிப்படையில் பெயர் வகைகள் : பெயர்கள் எல்லாவற்றையும் இட குறிப்பெயர், காரணப் பெயர், காரண இடுகுறிப்பெயர் என மூன்றாக வகுக்கலாம்.
இடுகுறிப் பெயர் :
பண்டுதொட்டு எக்காரணம் பற்றி இல்லாமலும், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றுக்கு வெறும் குறியீடு மாத்திரையாக இட்டு வழங்கப்பட்டு வரும் பெயர்கள் இடு குறிப்பெயர்கள் எனப்படும். உ-ம்: வாள், நிலம், மாரி,