மாத்திரை( mathirai) - தமிழ் இலக்கணம் |
மாத்திரை
1. கண்கள் ஒருதடவை இமைக்கும் நேரம் அல்லது கைவிரல்கள் ஒருதடவை சுண்டக் கடக்கும் நேரம் ஒரு மாத்திரைப் பொழுது எனப்படும். இந்த ஒரு மாத்திரைப் பொழுதுள் ஒரு குற்றெழுத்து ஒலிக்கப்பட்டு விடம். அதனால் ஒரு. குறிலின் அதாவது ஒரு குற்றெழுத்தின் மாத்திரை ஒன்று ஆகும். இது போல நெடில் அதாவது நெட்டெழுத்து ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரைப் பொழுதுள் ஒலிக்கப்பட்டூ விடுகிறது. எனவே ஒரு நெடிலின் மாத்திரை இரண்டு ஆகும். இவ்வாறே ஒரு மாத்திரைப் பொழுதுள் இரண்டு மெய்களோ ஒரு மெய் இரண்டு தடவையோ ஒலிக்கப்பட முடிவதால் ஒரு மெய்யின் மாத்திரை அரை எனக் கொள்ளப்படும். இவ்விதமே .'. ஆகிய ஆய்த எழுத்தும் ஓரிமைப் பொழுதுள் இருதடவை ஒலிக்கப்படுவதால் அரை மாத்திரை உடையதாயிற்று.