காரணப் பெயர் | karana peyar in tamil |
1. காரணப் பெயர் :
ஏதாவது ஒரு காரணம்பற்றி ஒரு பொருள், ஓர் இடம் முதலியவற்றுக்கு இடப்படும் பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும். உரம் : பாக்கு வெட்டி, விமானந்தாங்கி, கறுப்பி, கூழங்கையன், உண்ணி, உவரி, தொலைபேசி.
காரண இடுகுறிப் பெயர்கள்:
காரணங் கருதி வழங்கும்போது காரணப் பெயராகவும், அக் காரணங் கொண்ட பல பொருட்களுள்ளும் ஒரு பொருள் மட்டுமே அக் காரணப் பெயராலும் உரிமைபூண்டூ குறிக்கப்படும் போது இடுகுறியாயும் தோற்றமளிக்கும் பெயர்கள் காரண இடுகுறிப் பெயர்களாம். உ-ம்: நாற்காலி எனும் பெயர், ஒரு பொருள் நான்கு கால்கள் கொண்ட காரணத்தால் அமைந்தமையால் காரணப் பெயராகவும், நான்கு கால்கள் கொண்ட ஆடு, மாடு, மேசை போன்றவற்றுள்ளும் ஒரு வகை ஆசனத்துக்கு மட்டுமே உரித்தாகி அதனையே குறிப்பதாய் இடூகுறியாயும் நின்று, காரண இடுகுறியாயிற்று. நாற்காலி, முள்ளி, முக்கண்ணன், வாய்ச்சி, அடுப்பு, வானொலி, செய்யுள் போன்றவை காரண இடுகுறிப் பெயர்களாம்.
இன்றைய இயற் பெயர்கள் பல இடுசூறிகளே:
உலகில் ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு பெயர் இட்டு வழங்கப்படுகிறது. பண்டைக் காலங்களில் யார் யார்க்கோ காரணப் பெயர்களாய் அமைந்து வழங்கிய ஐங்கரன், ஆறுமுகன், திருநாவுக்கரசன், கரிகாலன், திருமார்பன், பிறைசூடி, வேலவன், மயில்வாகனன், பூபாலன், நாமகள், பொன்னி மங்கையர்க்கரசி முதலிய பெயர்களும் இன்று மக்களுக்கு இட்டு வழங்கப்படுகின்றன. இப் பெயர்கள் ஆதியில் காரணம்பற்றி உண்டானவை என்பதாலும் இன்று இடுகுறியாய் மக்களுக்கு இட்டு வழங்கப்படுவதாலும். இவை காரண இடுகுறிப் பெயர்கள் என்று, பிழையான முறையில் விளங்கிக் கொள்ளப்பட்டு இக்கால இலக்கணநூல்கள் சிலவற்றிலும் குறிக்கப்பட்டு விட்டன.
ஐங்கரன் என்பது ஐந்து கரங்களை உடையவர்- களுள்ளும் தலைமை சான்ற ஒருவனுக்கே காரண இடுகுறிப் பெயராக அமைய முடியும். அப்படி இருக்க, ஐந்து கரங்களுடைமையாகிய காரணமே அமையாத ஒருவனுக்கு அப் பெயர் காரண இடுகுறியாக அமைவது எவ்வாறு? இவை சோதிடர் ஆணைப்படி நட்சத்திர பாத எழுத்துக்கள் பொருத்தமே நோக்கமாக, வேறெக் காரணமும் அமையாது பெற்றோரால் இடப்பட்ட . வெறும் இடுகுறிப். பெயர்களே. இக் கருத்தே இலக்கணச் சுருக்க நூலாசிரியர் ரீல்ீ ஆறுமுக- நாவலர் முடிபுமாகும். காரண இடுகுறிப் பெயர்களுக்கு அவர் காட்டிய உதாரணங்களான முள்ளி, கறங்கு, முக் கண்ணன் அந்தணர் ஆகிய பெயர்கள் குறிக்கும் பொருள்கள் அனைத்தும் அப் பெயர்களுக்கான காரணங்களைத் தவறாது கொண்டிருப்பதே அதற்குச் சான்று. நன்னூலார் பெயர்களை இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என இரண்டாகவே வகுத்தார்.
வினைப் வினைப்பெயர் || வினையடிப் வினைப்பெயர்ப் பகுதிகள் (தொழிற்பெயர்ப்) | பகுதிகள் (தொழிற்பெயர்ப்) கொண்ட பகுதிகள் கொண்ட பகுதிகள் காரணப் கொண்ட காரணப் கொண்ட பெயர்கள் காரணப் பெயர்கள் காரணப் பெயர்கள் பெயர்கள்
கொல்லி கொலைஞன் நிலையம் (தொலைபேசி பேச்சாளன் காப்பு காப்பாளன் (கண்காணி காட்சியன் குற்றி குற்றியன் (மன்று)ஆடி ஆடலி முறுக்கு முறுக்கன் எதிரி எதிர்ப்பாளன் | களை களைவாளர் எழுத்து எழுத்தாளன் || பூண் பூட்கையர் பறவை பறப்பன் பிடி பிடிப்பாளர் பிணங்கி பிணக்கன் கொள்ளை கொள்ளையர் கோவை கோப்பாளன் ' || ஊண் ஊணர் முனை முனைவன் மறை மறையோன் சேரி சேரியான் அடி அடியாள் பிணி பிணியன்
இக் காரணப் பெயர்கள் அனைத்தும் குறிப்புவினை முற்றுக்க- ளாகவும் வரும்.
இன்னோர் அடிப்படையில் பெயர்ச்சொற்கள்: .
பெயர்கள் எல்லாம் பொதுப் பெயர், சிறப்புப்பெயர் என இரு வகையாகப் பிரிக்கப்படும்.
பொதுப் பெயர்கள் :
ஒரே இனத்துப் பல பொருட்களை மொத்தமாகச் சுட்டும் குழுப்பெயர் அல்லது சமூகப்பெயர் பொதுப்பெயராகும். மாட்டுவண்டி, பேருந்து, சரக்குந்து, மிதிவண்டி முதலிய ஊர்திகள் அனைத்தையும் மொத்தத்தில் சுட்டும் ஒரு பெயர்
வாகனம். எனவே வாகனம் என்பது ஒரு பொதுப் பெயர். இதுபோல மரம், மிருகம், பறவை, தொழிலாளர் எனப் பல பொதுப் பெயர்கள் உள.