கடல் கவிதை | kadal kavithai |
கடல் கவிதை
கையில் துடுப்பில்லை
அப்புறம்தான் தெரிந்தது
கடலில் இறங்கிவிட்டேன்
உங்களோடு வருகிறேன்
நானும் என்று கூறிய மகனோடும்
நெடுந்தொலைவில் விண்மீன்
நம்பிக்கை தரலாம்.
தொலைதூரத்தில் எதிரியின் கப்பல்
எதுவும் நேரலாம்
நேரட்டும்
கரையில் மனைவி
சிந்திய கண்ணீரை
முத்துக்களாய்த் திரட்டியபடி